கறி வெண்டைக்காய் சால்னா
தேவையான பொருட்கள்:
கறி - கால் கிலோ
வெண்டைக்காய் - 150 கிராம்
வெங்காயம் - நான்கு
தக்காளி - மூன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் - மூன்று தேக்கரண்டி
கொத்தமல்லி - கால் கட்டு
புதினா - 6,7 இதழ்
பச்சைமிளகாய் - இரண்டு
தேங்காய் - நன்கு பத்தை
எண்ணெய் - நான்கு தேக்கரண்டி
பட்டை - ஒரு இன்ச்
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியாத்தூள் - ஒரு மேசைக்கரண்டி
மஞ்சள் துள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
குக்கரில் எண்ணெயை காய வைத்து பட்டையை போட்டு வெங்காயத்தை நறுக்கி போட்டு வதக்கவும், வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி இரண்டு நிமிடம் வதக்கி சிம்மில் வைக்கவும்.
பிறகு கொத்தமல்லி, புதினா போட்டு வதக்கி தக்காளியை பொடியாக அரிந்து போட்டு, பச்சை மிளகாயையும் ஒடித்து போடவேண்டியது.
தக்காளி வெந்ததும் மிளகாய் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு வதக்கி கறியையும் சேர்த்து பிரட்டி ஐந்து நிமிடம் சிம்மில் வேக விட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரில் மூன்று விசில் வந்ததும் இறக்கவும்.
தேங்காயை மையாக அரைத்து ஊற்றி சிறிது நேரம் கொதிக்கவிடவும்.
இப்போது வெண்டைக்காயை நீளதுண்டுகளாக நறுக்கி அரைதேக்கரண்டி எண்ணெயில் வதக்கி சால்னாவுடன் சேர்க்கவும்.
கடைசியில் சிறிது கொத்தமல்லி தூவி இறக்கவும்.