கறி வறுவல்
தேவையான பொருட்கள்:
கறி - 1/4 கிலோ
மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்
மிளகுத்தூள் - 2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
தனியாத்தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
தயிர் - 3 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெங்காயம் - 2
தக்காளி - 1
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய்ப் பால் - 4 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
செய்முறை:
வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இறைச்சியை துண்டங்களாக நறுக்கி கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
இறைச்சியுடன் அனைத்து தூள்களையும் சேர்த்து, தேவையான உப்பு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் தயிர் சேர்த்துப் பிரட்டவும்.
பின்னர் அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து குக்கரை மூடிவைத்து வேகவிடவும்.
சுமார் 5 விசில் வரும் வரை வேக வைத்து பின்னர் எடுக்கவும். இப்போது தண்ணீர் சுண்டி கறி வெந்து இருக்கும்.
பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும், பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கி அத்துடன் வேக வைத்த கறியை சேர்த்து வதக்கவும்.
எல்லாம் சேர்ந்து நன்கு வதங்கியவுடன் தேங்காய்பால் ஊற்றவும். குழம்பு போல் அல்லாமல் திக்காக வந்தவுடன் இறக்கி, எலுமிச்சைசாறு ஊற்றி பரிமாறவும்.