கறி மக்ரோணி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மக்ரோணி - 400 கிராம் பாக்கெட்

கறி - அரை கிலோ

எண்ணெய் - ஐந்து மேசைக்கரண்டி

டால்டா - ஒரு தேக்கரண்டி

பட்டை, ஏலம், லவங்கம் - தலா இரண்டு

வெங்காயம் - நான்கு

தக்காளி - ஐந்து

இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஐந்து மேசைக்கரண்டி

பச்சைமிளகாய் - நான்கு

மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தேங்காய் பால் - ஒரு கப்

கொத்தமல்லி - கால் கட்டு

புதினா - 6 அல்லது 7 இதழ்

செய்முறை:

கறியை சுத்தம் செய்து தனியாக வைக்கவும்.

குக்கரில் எண்ணெய், டால்டா இரண்டையும் ஊற்றி சேர்த்து காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு வெங்காயம், இஞ்சி பூண்டு, கொத்தமல்லி, புதினா தழை போட்டு தாளித்து தக்காளி, பச்சைமிளகாய், மசாலா வகைகள், உப்பு போட்டு கிளறி கறியையும் போட்டு வதக்கி தயிர் சேர்த்து பத்து நிமிடம் சிம்மில் வைத்து வேக விடவும்.

கறியில் மசாலா நன்கு ஏற வேண்டும்.

ஒரு கப்புக்கு இரண்டு கப் வீதம் 400 கிராம் என்பது நாலு டம்ளர் இருக்கும். எட்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி இன்னும் ஒரு டம்ளர் கூட ஊற்றி மக்ரோணியையும் சேர்த்து குக்கரை மூடி நான்கு விசில் விடவும்.

ஆவி அடங்கி திறந்தததும், தேங்காய் பாலை ஊற்றி கொதிக்கவிட்டு மல்லி தழை தூவி இறக்கவும்

குறிப்புகள்: