கமலா ஊறுகாய்
தேவையான பொருட்கள்:
கமலா பழ தோல் - 4
புளி - எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள் - 1 தே.கரண்டி
கடுகு - 1 ஸ்பூன்
பூண்டு - 1 (முழுசு)
கருவேப்பிலை - 2 கொத்து
காய்ந்த மிளகாய் - 3
எண்ணெய் - 2 குழிக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
4 கமலாப் பழங்களை கழுவி பின் தோலை உறிக்கவும்.
தோலுடன் கொஞ்சம் உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
தோல் நல்லா வெந்ததும் நீரை வடிக்கட்டவும்.
பூண்டை தோலுரித்து வட்ட வட்டமாக அரிந்து வைக்கவும்.
புளியை வெந்நீரில் ஊற வைக்கவும்.
ஒரு மண் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,காய்ந்த மிளகாய்,கருவேப்பிலை,மஞ்சள் போட்டு தாளிக்கவும்.
அதில் பூண்டை போட்டு சிவக்க வதக்கவும்.
பூண்டு வதங்கியதும் புளிக்கரைசலை திக்காக எடுத்து அதில் ஊற்றவும்.
தேவையான உப்பு போடவும்.
புளிக்கரைசலில் வேகவைத்த தோலைப் போடவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து தோலுடன் எல்லாமும் சேர்ந்து எண்ணெயை வெளியிடும் வரை வைத்திருக்கவும்.
பின் அடுப்பை அணைக்கவும்.
மறுநாள் மீண்டும் அடுப்பில் வைத்து சூடு படுத்தவும்.
இப்படியே 3,4 நாட்கள் செய்யவும்.
இப்போது இந்த ஊறுகாயை ஒரு சுத்தமான பாட்டிலில் போட்டு வைக்கவும்.
சுவையான கமலா ஊறுகாய் ரெடி.