கத்திரிக்காய் மாங்காய்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிறு பருப்பு - 1 பிடி (வறுத்துப்போட்டால் வாசனையா இருக்கும்)

கத்திரிக்காய் - 3 (வெள்ளை கத்திரிக்காய் என்றால் சுவை கூடும்)

தக்காளி - 2

மிளகாய் - 1

மஞ்சள்தூள் 1/2 ஸ்பூன்

மிளகாய்தூள் - சிறிது

மாசி - சிறிது

மாங்காய் - சிறிய துண்டு (அல்லது அடை ஊறுகாய்)

செய்முறை:

தேவையானப் பொருட்களை தயாராய் எடுத்து வைக்கவும். மாங்காயை தோல் நீக்கவும். தக்காளியை நறுக்கி கொள்ளவும். மாங்காய் இல்லையென்றால் அடை ஊறுகாய் பயன்படுத்தலாம். இதனை நன்கு மசித்துக் கொள்ளவும்.

குக்கரில் சிறுபருப்பு, நறுக்கின தக்காளி, கத்திரிக்காய், மஞ்சள்தூள், மிளகாய், வத்தல்தூள் (மாங்காய் இருந்தால் தோல் நீக்கி, துண்டுகளாக நறுக்கி) போடவும்.

பருப்பு, காய்கள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விடவும்.

குக்கரை மூடி வைத்து, அடுப்பில் வைத்து வேகவிடவும். மூன்று அல்லது நான்கு விசில் வரும்வரை வேகவிடவும்.

பின்னர் குக்கரை திறந்து அதில் உள்ள மிளகாயை மட்டும் தனியே எடுத்துவிடவும்.

அதன்பின்பு ஒரு ப்ளெண்டர் கொண்டு குக்கரில் உள்ளவற்றை மசிக்கவும். ப்ளெண்டர் இல்லாதவர்கள் மிக்ஸியில் இட்டு மசித்துக் கொள்ளலாம். மிக்ஸியில் மசிக்கும்போது சிறிது சிறிதாக ஜாரில் போட்டு, மிதமாய் ஓடவிட்டு உடன் எடுத்துவிடவும். சற்று ஆறவைத்து போடவும்.

அடுத்ததாக பிழிந்தெடுத்து வைத்துள்ள முதல் தேங்காய்பாலை மசித்த பருப்பு காய்களுடன் கொட்டி கிளறிவிடவும்.

பின்னர் குக்கரை அடுப்பில் ஏற்றி வேகவிடவும். ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடவும்.

மாங்காயை சேர்த்து செய்திருந்தால் ஆறியதும் மாசித்தூள், கறி தாளிப்பு போட்டு நன்கு கிளறவும். ஏற்கனவே எடுத்து வைத்து இருக்கும் கறியின் மேலோட்ட எண்ணெய்யை மேலே சொல்லி இருப்பது போல் ஊற்றி சாப்பிடலாம்.

மாங்காய் போடாதவர்கள் மசித்து வைத்து இருக்கும் அடை ஊறுகாயை மாசித்தூள், கறித்தாளிப்பு விடும் சமயத்தில் சேர்க்கவும் (மாசி, அடை ஊருகாய் இவை இரண்டும் பருப்பு ஆறியதும் சேர்க்க வேண்டும். இல்லையெனில் கடுத்துவிடும்.)

இப்போது சுவையான கத்தரிக்காய் மாங்காய் பருப்பு தயார்.

குறிப்புகள்:

சாதம், கத்திரிக்காய் மாங்காய், ரசம், அவித்த முட்டை நல்ல காம்பினேஷன்.