கத்தரிக்காய் சம்பல்

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பெரிய கத்தரிக்காய்-1

தக்காளி-2

வெங்காயம்-2

பச்சை மிளகாய்-1

புதினா,கொத்தமல்லி-சிறிதளவு

தேங்காய் துறுவல்-ஒரு கைப்பிடி

உப்பு-தேவைக்கு

செய்முறை:

கத்தரிக்காயை தீயில் காட்டி சுடவும். தக்காளியையும் தோல் பிரியும் அளவுக்கு சுடவும்.

இரண்டிலும் கருகிய தோலை நீக்கிவிட்டு கையால் பிசையவும்.

அதில் மேலே சொன்ன எல்லா பொருட்களையும் போட்டு நன்கு பிசையவும்.

அரை மணிநேரம் ஊறவைத்து பின் பரிமாறலாம்

குறிப்புகள்: