கடல் பாசி

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கடல் பாசி - ஒரு பாக்கெட்

சீனி - ஒரு கப்

கலர் பவுடர் - கால் தேக்கரண்டி

பன்னீர் - கால் தேக்கரண்டி

தண்ணீர் - 2 கப்

உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

தமிழ்நாட்டில் கடல்பாசி என்று கடைகளில் கேட்டால் கிடைக்கும். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் China grass என்று உள்ளதை வாங்கிக் கொள்ளவும். இது சில சமயம் பொடித்து, தூளாகவும் கிடைக்கும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து சூடாக்கவும்.

லேசாக கொதி வந்ததும் கடல் பாசியை போட்டு கைவிடாமல் மூன்று நிமிடம் கிளறவும்.

கடல்பாசி நன்கு கரைந்ததும், சீனியை சேர்த்துக் கிளறி வேகவிடவும்.

சீனி கரைந்தவுடன், எல்லாம் சேர்ந்து கொதித்து பால் போன்று பொங்க ஆரம்பிக்கும். அப்போது தீயின் அளவை குறைத்து வைக்கவும்.

அதில் கலர் பொடியையும், வாசனைக்கு சிறிது பன்னீரையும் சேர்க்கவும். ஒரு சிட்டிகை உப்பையும் சேர்க்கவும்.

அதன் பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி, அச்சில் ஊற்றவும்.

அச்சில் ஊற்றி சுமார் 15 நிமிடங்கள் ஆறின பிறகு எடுத்துப் பரிமாறவும்.

இதனை விருப்பமான வடிவ அச்சுகளில், பாத்திரங்களில் ஊற்றி ஆறவிடலாம். சற்று ஆறியபிறகு சிறிது நேரம் ப்ரிட்ஜில் வைத்து பிறகு எடுத்துப் பரிமாறலாம். விருப்பமான வண்ணங்களும் சேர்த்துக் கொள்ளலாம்.

குறிப்புகள்: