கடலை பணியாரம்
0
தேவையான பொருட்கள்:
தேங்காய் - ஒன்று (சிறியது)
பொட்டுக்கடலை - 250 கிராம்
சர்க்கரை - 150 கிராம்
முந்திரி - 50 கிராம்
மைதாமாவு - 200 கிராம்
உப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்தூள் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்க
நெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்
செய்முறை:
தேங்காயை முக்கால் பகுதி துருவிக்கொண்டு கால்பகுதி பால் எடுக்கவும்
பொட்டுக்கடலையை ஒன்றிரண்டாக பொடிக்கவும். சீனியை தூளாக்கவும்
முந்திரியை நெய்யில் வறுத்து பொடிபொடியாக நறுக்கவும்.
மைதாவில் தேங்காய்ப்பால், உப்பு ஒரு டேபிள்ஸ்பூன் சீனி சேர்த்து பஜ்ஜிமாவு பதத்திற்கு கரைத்து வைக்கவும்.
தேங்காய் துருவலுடன் பொட்டுக்கடலை, முந்திரி, சீனி, ஏலக்காய்தூள் எல்லாம் சேர்த்து பிசைந்து ஒரு மணி நேரம் ஊறவிடவும்
ஒரு மணிநேரம் கழித்து உருண்டைகள் பிடித்து மைதாவில் நனைத்து பொரிக்கவும்.