எக் வித் பீஸ் கேப்ஸிகம் புர்ஜி
0
தேவையான பொருட்கள்:
முட்டை - மூன்று
பீஸ் - கால் கப் (வெந்தது)
கேப்ஸிகம் - கால் கப்
வெங்காயம் - ஒன்று (பெரியது)
பச்சைமிளகாய் - ஒன்று (பொடியாக அரிந்தது)
மிளகாய் தூள் - அரைத்தேக்கரண்டி
பால் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
செய்முறை:
முட்டையை பால் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.
ஒரு நாண் ஸ்டிக் பேனை காயவைத்து எண்ணெயை ஊற்றி வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
சிறிது வதங்கியதும் வெந்த பீஸ், கேப்ஸிகம் பொடியாக அரிந்து வதக்கிய மிளகாய்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.
இப்போது கலக்கி வைத்துள்ள முட்டையை சேர்த்து இரண்டு நிமிடம் வேகவிட்டு கிளறி கொத்திவிட்டு இறக்கவும்.
பரோட்டா, சப்பாத்திக்கு ஏற்ற நல்ல சைட் டிஷ்.