உன்னக்காய்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நேந்திரம் பழம் - 3 (நன்கு பழுக்காமல் பச்சையிலிருந்து பழுக்கும் பருவம் வருமே அந்த அளவு பழுத்த பழம் பார்த்து வாங்குங்கள்)

உடைத்த முந்திரி பருப்பு - 6

திராட்சை - 5

நெய் - ஒரு தேக்கரண்டி

தேங்காய் துருவல் - கால் கப்

சர்க்கரை - 2 தேக்கரண்டி

ஏலக்காய் பொடி - கால் தேக்கரண்டி

முட்டை - ஒன்று

எண்ணெய் பொரிக்க - ஒரு கப்

செய்முறை:

பழத்தை தோலோடு குக்கரில் போட்டு பாதியாக வேண்டுமானால் அறுக்கலாம். இல்லாவிட்டால் நீண்டு கொண்டு நிற்கும். கால் கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசிலுக்கு வேக விடுங்கள்.

பின் ஆவி அடங்கியதும் எடுத்து நன்கு மசித்துக் கொள்ளுங்கள். கட்டியில்லாது மசித்தால் சப்பாத்தி மாவு போல் வரும். பழம் நன்கு பழுத்தால் சரியாக வராது.

மசித்த பழத்தை தனியே வையுங்கள். நெய்யை சூடாக்கி திராட்சை, முந்திரி போட்டு சிவந்ததும் முட்டை உடைத்து ஊற்றி சிக்கி தீயை அணைத்து விட்டு தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்து கலக்கி வையுங்கள்.

பிறகு கையில் எண்ணெய் தடவிக் கொண்டு மசித்த பழத்தில் பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து கையில் வைத்து தட்டையாக தட்டவும் அதன் நடுவில் 1/2 தேக்கரண்டி பூரணத்தை வைத்து ஓரத்தை உள்ளிழுத்து மூடி கொழுக்கட்டை போல் மென்மையாக கையால் அழுத்தி ரக்பி பந்து (egg shape)ஷேப்புக்கு கொண்டு வரவும்.

அதே போல் மீதமுள்ள பழம் மசித்ததாலும் செய்யவும். பின் எண்ணெயை காயவைத்து இதனை பொரித்து பொன்னிறமாக எடுத்து பரிமாறவும்.

முதல் முறை செய்தால் கொஞ்சம் சொதப்பும். ஆனால் அடுத்த முறைக்கு ஒரு ஐடியா கிடைக்கும். பின் 5 நிமிடத்தில் செய்து விடலாம். பார்க்க வித்தியாசமான ஒரு இனிப்பு வகை. சுவையும் சூப்பராக இருக்கும்

குறிப்புகள்: