இறால் கோடா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோடா - இரண்டரை டம்ளர்

இறால் - 15

தக்காளி - மூன்று

வெங்காயம் - இரண்டு

இஞ்சி பூண்டு பேஸ்ட் - இரண்டு தேக்கரண்டி

பச்சை மிளகாய் - இரண்டு

மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி

மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு

கொத்தமல்லி, புதினா - சிறிது

எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி

பட்டை - ஒரு அங்குலத்துண்டு

கிராம்பு - இரண்டு

தேங்காய் பவுடர் - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:

இறாலை கழுவி முதுகிலும், வயிற்றிலுமுள்ள அழுக்கை எடுத்து சுத்தம் செய்து சிறிது உப்பு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு பிசறி வைக்கவும்.

குக்கரில் எண்ணெயை காயவைத்து பட்டை கிராம்பு போட்டு தாளித்து வெங்காயம் போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு நன்கு கிளறி சிம்மில் வைத்து பொன்முறுவலானதும் கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி தக்காளியை நீளவாக்கில் நான்காக அரிந்து சேர்த்து உப்பு, மஞ்சள் பொடி போட்டு வதக்கி தீயை சிம்மில் வைத்து வேக விட வேண்டும்.

இரண்டு நிமிடம் கழித்து ஊறவைத்துள்ள இறாலை சேர்த்து நன்கு வதக்கி மீண்டும் ஐந்து நிமிடம் சிம்மில் வைத்து வேக விட வேண்டும்.

தண்ணீர் கோடா இரண்டரை கப் என்றால் இரண்டு மடங்கு + ஒரு டம்ளருடன் தேங்காய் பவுடரை கரைத்து சேர்த்து கொதி வந்ததும் கோடாவை போட்டு நான்கைந்து விசில் விட்டு இறக்கவும்.

சூப்பரான சுவையான இறால் கோடா ரெடி. தொட்டுக்க நார்த்தங்காய் ஊறுகாய் வைத்து சாப்பிடவும்.

குறிப்புகள்: