இறால் ஃப்ரைட் ரைஸ்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப்

இறால் - ஆறு

இஞ்சி பூண்டு பேஸ்ட் - கால் தேக்கரண்டி

முட்டைகோஸ் - கால் கப்

முட்டை - ஒன்று

மேகி சிக்கன் கியூப் - பாதி பாக்கெட்

மிளகு தூள் - கால் தேக்கரண்டி

பட்டர் - ஆறு தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு

செய்முறை:

முட்டையில் உப்பு, மிளகு தூள் சேர்த்து அடித்து கொள்ள வேண்டும்.

இறாலை சுத்தம் செய்து ஒவ்வொரு இறாலையும் மூன்றாக வெட்டி கொள்ள வேண்டும்.

முட்டை கோசை நீளவாக்கில் நறுக்கி வைக்க வேண்டும்.

பெரிய வாயகன்ற வாணலியில் முதலில் நான்கு தேக்கரண்டி பட்டைரை உருக்கி அதில் இறால், இஞ்சி பூண்டு பேஸ்ட், மேகி கியூப் போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும். அதிலேயே முட்டை கோசை போட்டு இரண்டு நிமிடம் வதக்கவும்.

அதன் மேலேயே முட்டை ஊற்றி, தேவைக்கு உப்பு சேர்த்து வதக்கி உதிரியாக வேக வைத்து வைத்திருக்கும் சாதத்தையும் போட்டு நல்ல வதக்கி கடைசியில் மீதி பட்டரை போட்டு வதக்கி இறக்கி சூடாக சாப்பிட வேண்டும்.

குறிப்புகள்: