இனிப்பு மாங்காய் பச்சடி

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஒட்டு மாங்காய் - 1

மஞ்சள் கலர் - 1 சிட்டிகை

சீனி - 1 கப்

ஏலக்காய் - 2

நெய் - 1 ஸ்பூன்

உப்பு - சிறிது

செய்முறை:

மாங்காயை தோல் சீவவும்.

சதை பகுதியை கத்தியால் செதுக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து நெய் ஊற்றி ஏலக்காயை போடவும்.

அதில் செதுக்கிய மாங்காய் துண்டுகளைப் போடவும்.

மாங்காய் வேகும் அளவு தண்ணீர் ஊற்றவும்.

அதில் உப்பு மற்றும் கலர் சேர்த்து வேக விடவும்.

தண்ணீர் வற்றியதும் இறுதியில் சீனியை போட்டு அடுப்பை சிம்மில் வைக்கவும்.

சீனியும் மாங்காயும் நல்லா சேர்ந்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

குறிப்புகள்: