இத்தாலியன் சாலட் 2
தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய் - ஒன்று
குடை மிளகாய் - கால் துண்டு
கேரட் - ஒன்று
லெட்யூஸ் இலைகள் - சிறிது
செலரி இலைகள் - சிறிது
மயானஸ் - 1 மேசைக்கரண்டி
ஆலிவ் ஆயில் - ஒரு மேசைக்கரண்டி
சாஸ் - ஒரு தேக்கரண்டி
சர்க்கரை - அரை தேக்கரண்டி
வறுத்த வேர்கடலை - இரண்டு மேசைக்கரண்டி (கொரகொரப்பாக தூள் செய்தது)
மக்ரோனி - அரை கப் (வேக வைத்தது)
லெமென் - அரைப்பழம்
உப்பு தூள் - அரை தேக்கரண்டி
வெள்ளை மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
செய்முறை:
மக்ரோனியை வேகவைத்து தண்ணீரை வடித்து வைக்கவும்.
கேரட், வெள்ளரி தோலெடுத்து கேரட்டை துருவி கொள்ளவும், வெள்ளரியை பொடியாக நறுக்கி கொள்ளவும். செலரி, லெட்யூஸை கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நறுக்கிய எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து அதில் சீஸ், ஆலிவ் ஆயில், சர்க்கரை மயானஸ் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
அடுத்து மக்ரோனி, வேர்க்கடலையை சேர்க்கவும்.
கடைசியில் மிளகுத் தூள், உப்பு தூள், தூவி எலுமிச்சைச்சாறை பிழிந்து கலந்து சாப்பிடவும்.
நல்ல ஹெல்தியான சத்தான இத்தாலியன் சாலட்.