இடியாப்பம் ஃப்ரை
0
தேவையான பொருட்கள்:
இடியாப்பம் - 4
பால் - 3 கரண்டி
கேரட் - 1
உருளை - 1
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
முட்டை - 2
உப்பு - சிறிது
நெய் - தாளிக்க
செய்முறை:
இடியாப்பத்தில் கொஞ்சம் பால் தெளித்து உதிரியாக்கவும்.
அனைத்து காய்களையும் பொடியாக நறுக்கவும்.
வாணலியில் நெய் ஊற்றி அதில் வெங்காயம் போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
பிறகு தக்காளி,மிளகாய் போடவும்.
அதன் பின் கேரட்,உருளையை போட்டு உப்பு சேர்த்து வதக்கி அடுப்பை சிம்மில் வைத்து மூடவும்.
மிதமான தீயில் காய்கள் வெந்ததும் முட்டைகளை ஊற்றவும்.
முட்டை வெந்ததும் அதில் இடியாப்பத்தை போட்டு கிளரவும்.
காலை அல்லது மாலை டிஃபனுக்கு சூடாக சாப்பிட நன்றாக இருக்கும்.