இஞ்சி டீ(சுறுசுறுப்பிற்கு)

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பால் பவுடர் - ஏழு தேக்கரண்டி (அ) பால் - இரண்டு டம்ளர்

தண்ணீர் - நாலு டம்ளர் (அ) இரண்டு டம்ளர் தண்ணீர்

தட்டிய ஏலக்காய் - இரண்டு

இஞ்சி - 25 கிராம்

டீ தூள் - இரண்டு தேக்கரண்டி

சர்க்கரை - எட்டு தேக்கரண்டி

செய்முறை:

தண்ணீரில் பால் பவுடரை கலந்து கட்டி பிடிக்காமல் கரைத்து கொதிக்க விடவும். கொதித்து கொண்டிருக்கும் போது ஏலக்காய் தட்டியது, சர்க்கரை, டீ தூள் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.

கொதித்துக்கொண்டிருக்கும் போது இஞ்சியை தோல் சீவி பேப்பரில் வைத்து தட்டியோ(அ) மிக்ஸியில் திரித்தோ (அ) கேரட் துருவியில் பூத்துருவலாக துருவியோ சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு அடுப்பை ஆஃப் பண்ணி விட்டு மூடி போடவும். இரண்டொரு நிமிடம் கழித்து வடிகட்டி சூடாக மேரி பிஸ்கேட் (அ) குளுகோஸ் பிஸ்கேட்டுடன் குடிக்கவும்.

குறிப்புகள்: