ஆலு பரோட்டா (குழந்தைகளுக்கு) 5
தேவையான பொருட்கள்:
மாவை குழைக்க:
மைதா - ஒரு கப்
பட்டர் - ஒரு தேக்கரண்டி
உப்பு - கால் தேக்கரண்டி
பால் - இரண்டு மேசைக்கரண்டி
பில்லிங் செய்ய:
பொடேட்டோ - ஒன்று (வேகவைத்து மசித்தது)
கரம் மசாலாத்தூள் - கால் தேக்கரண்டி
சீரக தூள் - கால் தேக்கரண்டி
மிளகு தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - ஒரு பின்ச்
கொத்தமல்லித்தழை - 2 மேசைக்கரண்டி ( பொடியாக நறுக்கியது)
எண்ணெய் + பட்டர் (அ) நெய் கலவை - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
மாவை குழைத்து கொள்ளுங்கள்.
பொடேட்டோவில் கலக்க வேண்டிய அனைத்து பொருட்களையும் நல்ல மசித்து கொள்ளுங்கள்.
சிறிய உருண்டையை வைத்து வட்ட வடிவில் (அ) சதுர வடிவில் மாவை தேய்த்து அதில் இந்த பில்லிங்கை பரவலாக வைத்து சதுர வடிவமாக மூடி இருபக்கமும் மாவை தடவி மீண்டும் மெதுவாக தேய்க்கவும்.
தேய்த்து தவாவில் எண்ணெய் பட்டர் (அ) நெய் கலவையை கொஞ்சமாக ஊற்றி ஒரு ஒரு பரோட்டாவாக பொரித்தெடுக்கவும்.