ஆட்டு ஈரல் கூட்டு

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ஈரல் - 1/4 கிலோ

வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 2

மிளகாய் தூள் - ஒரு கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

கரம் மசாலாத் தூள் - 1/2 தேக்கரண்டி

கொத்தமல்லித்தழை - சிறிது

எண்ணெய் - 3 தேக்கரண்டி

உப்பு - 1/2 தேக்கரண்டி

செய்முறை:

ஈரலை மேலே உள்ள மெல்லிய தோலை எடுத்து சுத்தம் செய்து மஞ்சள் தூள் போட்டு கழுவி வைக்கவும்

ஒரு வாணலியில் எண்ணெயை காய வைத்து வெங்காயம் போட்டு வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு கிளறி இரண்டு நிமிடம் சிம்மில் வைக்கவும்.

பிறகு ஈரலை போட்டு பிரட்டி, மிளகாய் தூள், உப்பு, கரம் மசாலா தூள், மஞ்சள் தூள் போட்டு தக்காளியை அரைத்து ஊற்றி பச்சை மிளகாயை உடைத்து போட்டு மசாலா முழுவதும் ஈரலில் பிடிக்கும் வரை ஒரு கிளறு கிளறி சிம்மில் வைத்து ஐந்து நிமிடத்தில் கொத்தமல்லித்தழை தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: