ஆட்டுக்கால் பாயா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆட்டுக்கால் - 4

பச்சை மிளகாய் - 2

வெங்காயம் - ஒன்று

தக்காளி - 3

இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

மல்லிக்கீரை - ஒரு கட்டு

மிளகாய்தூள் - 3 தேக்கரண்டி

மல்லித் தூள் - 4 தேக்கரண்டி

கரம் மசாலாத்தூள் - 2 தேக்கரண்டி

தேங்காய் விழுது - ஒரு கப்

கசகசா - ஒரு தேக்கரண்டி

சிக்கன் க்யூப் - அரை க்யூப்

திக்கான தேங்காய்ப்பால் - 150 மில்லி

ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று

பட்டை - சிறிது

எண்ணெய் - 5 தேக்கரண்டி

உப்பு - அரை தேக்கரண்டி

செய்முறை:

தேங்காய் விழுது தயார் பண்ணும் போது அதோடு கசகசாவையும் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி ஏலக்காய், பட்டை, கிராம்பு போட்டு தாளித்து பச்சை மிளகாய், நைசாக நறுக்கிய வெங்காயம் பாதி போட்டு தாளிக்கவும்.

வெங்காயம் பொன்முறுகலாகும் போது இஞ்சி, பூண்டு விழுது போட்டு முறுக ஆரம்பிக்கும் போது மல்லிக்கீரை போட்டு தாளித்து, ஒரு ஸ்பூன் மிளகாய் தூளை போட்டு தீயாத அளவு தாளிக்கவும்.

பிறகு வெட்டிவைத்துள்ள ஆட்டுக்காலையும் தக்காளி மற்றும் மீதி வெங்காயத்தையும் போட்டு சற்று வதக்கவும்.

பிறகு வேகும் அளவு தண்ணீர் சேர்த்து மசாலாத்தூள், மல்லித்தூள், மீதி மிளகாய்தூள், கசகசா தேங்காய் விழுது, சிக்கன் க்யூப், உப்பு சேர்த்து வேகவைக்கவும்.

ஆட்டுக்கால் வெந்தவுடன் தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: