ஆட்டுக்கால் பாயா (மிளகு)
தேவையான பொருட்கள்:
வேக வைக்க:
முழு ஆட்டு கால் - ஒன்று
வெங்காயம் - ஐந்து
தக்காளி - ஐந்து
பச்சை மிளகாய் - நான்கு
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஐந்து மேசைக்கரண்டி
மிளகு தூள் - 2 1/2 தேக்கரண்டி
தனியாத்தூள் - மூன்று மேசைக்கரண்டி
தேங்காய் - ஒரு மூடி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
-----------------
எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
பட்டை, ஏலம், கிராம்பு - தலா இரண்டிரண்டு
இஞ்சி பூன்டு பேஸ்ட் - ஒரு மேசைக்கரண்டி
கொத்தமல்லி - ஒரு கொத்து
புதினா - பத்து இதழ்
செய்முறை:
ஆட்டு காலை நல்ல உரசி கழுவி அதில் உள்ள அழுக்கு, முடி எல்லாம் எடுத்து கழுவி, அதில் நான்கு வெங்காயம், நான்கு மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி, உப்பு தூள், மிளகு தூள், தனியா தூள், மஞ்சள் தூள் அனைத்தையும் போட்டு பிரட்டி நான்கு பெரிய டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரில் பதினைந்து நிமிடம் அதிக தீயிலும், பதினைந்து நிமிடம் சிம்மிலும் மொத்தம் அரை மணிநேரம், வேகவைத்து இறக்கி தேங்காய் அரைத்து ஊற்றி கொதிக்க விடவும்.
தனியாக சட்டியில் எண்ணெய் இரண்டு மேசைக்கரண்டி ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலம் தலா இரண்டு போட்டு ஒரு வெங்காயத்தை போட்டு நல்ல வதக்கி இஞ்சி, பூண்டு பேஸ்டும் போட்டு இரண்டு நிமிடம் வதக்கி கொத்தமல்லி புதினா சேர்த்து வதக்கி ஆட்டுக் காலில் ஊற்றவும்.
குறிப்புகள்:
காலில் கொழுப்பு அதிகம் இருக்கும் ஆகையால் எண்ணெய் கம்மியா ஊற்றினால் போதும்.