ஆஃப் பாயில் (அ) புல்சை
0
தேவையான பொருட்கள்:
முட்டை - 2
முழு மிளகு - 6 (ஒன்றும் பாதியுமாக தட்டி கொள்ளவும்)
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - இரண்டு சிட்டிகை
செய்முறை:
முட்டை ஜாக்கிரதையாக கலங்காமல் உடைத்து ஊற்ற வேண்டும்.
தோசை தவா காய்ந்ததும் அதில் எண்ணெய் விட்டு இரண்டு முட்டையையும் ஒன்றாக உடையாமல் முழுசாக ஊற்ற வேண்டும்.
ஒரு பக்கம் வெந்ததும் அப்படியே பொறுமையாக எடுத்து தட்டில் வைக்க வேண்டும். கீழே உள்ள சூட்டிலேயே மேலே சிறிது வெந்து விடும்.