ஃபிரெஞ்ச் சிக்கன் ஃப்ரை

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கோழி கால் - 6

பூண்டு தூள் - 2 தேக்கரண்டி

மிளகு தூள் - 2 தேக்கரண்டி

மேகி சாஸ் - 1 தேக்கரண்டி

முட்டை - 2

எண்ணெய் - பொரித்து எடுப்பதற்கு

உப்பு - ஒரு மேசைக்கரண்டி

செய்முறை:

கோழி காலில் மேல் பகுதியில் உள்ள முள்ளை மட்டும் வைத்துவிட்டு மீதி முள்ளை வெட்டிவிட்டு சதை பகுதியை லேசாக நசுக்கவும்

அதில் மிளகுத்தூள், பூண்டுதூள், உப்பு, மேகிசாஸ் எல்லாம் சேர்த்து பிரட்டி ஒரு மணிநேரம் ஊற விடவும்.

முட்டையை ஒரு கோப்பையில் சிறிது உப்பு போட்டு நன்கு கலக்கி அதில் ஒவ்வொரு கோழி துண்டாக நனைத்து எண்ணெயில் போட்டு பொரித்து சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: