ஹோட்டல் ரவா கேசரி

on on on off off 8 - Good!
3 நட்சத்திரங்கள் - 8 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்

தண்ணீர் - 3 கப்

சர்க்கரை - 1 1/4 கப்

வறுத்து பொடித்த முந்திரி -1 மேசைக்கரண்டி

ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி

டால்டா - 1/4 கப்

கேசரிபவுடர் - சிட்டிகை

செய்முறை:

முதலில் தண்ணீரை கொதிக்கவிட்டு கொதிவந்ததும் கேசரிபவுடர் சேர்த்து பின் ரவையைபோட்டு கட்டியில்லாமல் கிளறவும்.

பின் சர்க்கரையை சேர்த்து கிளறவும்

நீர் வற்றி கெட்டியாகும்போது டால்டாவை சிறிது சிறிதாக ஊற்றி பதம் வரும்போது கடைசியாக ஏலக்காய்த்தூள், முந்திரி துண்டுகள் சேர்த்து கிளறி இறக்கி பரிமாறவும்

குறிப்புகள்: