ஹெல்தி அல்வா
3 - Ok!
2 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பப்பாளி - 1
ஆரஞ்சு பழம் - 3
சர்க்கரை -1 கப்
நெய் - 2 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய நட்ஸ் - 1/2 கப்
ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் பப்பாளியை தோல் ,கொட்டை நீக்கி ப்ளண்டரில் அடிக்கவும்
ஆரஞ்சு பழத்திலிருந்து 1 கப் அளவுக்கு ஜுஸ் எடுக்கவும்
சர்க்கரையை பொடி செய்யவும்
தோல் நீக்கிய பாதாம்,பிஸ்தாவை பொடியாக நறுக்கவும்.
ஏலக்காயை வறுத்து பொடிக்கவும்
முதலில் பப்பாளிக்கலவையை பச்சை வாசனை போகுமாறு சிறிது நெய் விட்டு மைக்ரோ ஹையில் 2 நிமிடம் வைத்து எடுக்கவும்…
பிறகு ஜுஸ் சேர்த்து கலக்கி மேலும் 3 நிமிடம் வைக்கவும்
நடுநடுவே கிளறவும்
அதனுடன் சர்க்கரை மற்றும் இதர பொருட்கள் சேர்த்து மேலும் 5 நிமிடங்கள்
பதம் வரும்வரை வைத்து எடுத்து பரிமாறவும்.