ஸ்வீட் ஹார்ட்ஸ்

on on on off off 15 - Good!
3 நட்சத்திரங்கள் - 15 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மைதா - 250 கிராம்

டால்டா - 25 கிராம்

சர்க்கரை - 1/2 கப்

எண்ணைய் - பொரித்தெடுக்க

உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

மைதாவை சலித்து உப்பு சேர்த்து அதனுடன் டால்டாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பூரிக்கு பிசைவது போல் நன்றாக பிசையவும்.

இந்த மாவை பூரிக்கு உருட்டுவது போல் உருட்டிக் கொள்ளவும்.

வட்டமான பூரியில் இரண்டு பக்கத்திலிருந்துல் அப்படியே மடித்து உருட்டிக் கொண்டே வரவும்.

இரண்டு ரோல்களையும் நடுவில் கொண்டு வந்து நிறுத்தி இதை அப்படியே நீரால் ஒட்டி விடவும்.

சைடில் பார்க்க ஹார்ட் போலவே இருக்கும்.

இதை கொஞ்சம் திக்காக அதே சமையம் ஒழுங்கான ஹார்ட்டாக வரும்படி வெட்டிக் கொள்ளாவும்.

இந்த ஹார்ட்ஸை எண்ணையில் போட்டு பொரித்தெடுக்கவும்.

சர்க்கரை பாகு காய்ச்ச:

சர்க்கரையுடன் நீர் ஊற்றி நன்றாக கொதித்தபின் ஆறவிடவும். பொரித்த ஹார்ட்சை போட்டு ஊற விடவும்.

குறிப்புகள்: