ஸ்வீட் ரிப்பன் ரோல்ஸ்
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1/4 கப்
அரிசி மாவு - 1 கப்
பொடித்த சீனி - 1/4 கப்
நெய் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - சிறிதளவு
செய்முறை:
கோதுமை மாவு மற்றும் அரிசி மாவை சலித்துக் கொள்ளவும். ஒரு பெரிய தட்டில் கோதுமை மாவு, அரிசி மாவு, உப்பு மற்றும் நெய் சேர்த்து கையால் ஓரே சீராக நன்கு பிசைந்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் சீனியை போட்டு கரைத்துக் கொள்ளவும்.
அதன் பிறகு மாவுடன் சர்க்கரை பாகை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பிசையவும். பிசைந்த மாவை நீளமாக உருட்டி மடித்து இரண்டு பக்கமும் பிடித்து ரிப்பன் போல் சுருட்டவும். (சுருட்ட முடியவில்லை என்றால் சிறிது கோதுமை மாவை சேர்த்துக் கொள்ளவும்.)
இதைப் போலவே மீதமுள்ள மாவில் செய்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் செய்து வைத்திருக்கும் ரோல்களை போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
இன்னும் அதிக இனிப்பு வேண்டுமென்றால் பொடித்த சீனியில் பிரட்டிக் கொள்ளவும்.