ஸ்வீட் பிரட்
3 - Ok!
2 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பிரட் ஸ்லைஸ் (துண்டுகள்) - 5
நெய் - 150 கிராம்
பால் கோவா - 50 கிராம்
சீனி - 1/4 கிலோ
தண்ணீர் - 1/2 லிட்டர்
குங்குமப்பூ - ஒரு சிட்டிகை
செய்முறை:
பிரட்டில் ஓரத்தை வெட்டிவிட்டு நெய்யில் பொரிக்கவும்.
சீனியை பாகு காய்ச்சவும் பொரித்ததை சீனி பாகில் போடவும் அதனுடன் பால்கோவாவை கலந்து விடவும்.
நன்கு ஊறியதும் குங்குமப்பூ மேலே தூவி பரிமாறவும்.