ஸ்வீட் சமோசா (1)
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
முந்திரி - 1 கப்
வேர்க்கடலை - 1 கப்
சர்க்கரை - 2 கப்
தேங்காய்ப்பூ (வறுத்தது) - 1 கப்
ஏலக்காய் - 5
மைதா - 3 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரித்தெடுக்க தேவையான அளவு
செய்முறை:
தேங்காய், முந்திரி, வேர்க்கடலை, ஏலக்காய், சர்க்கரை ஆகியவற்றை பொடித்துக்கொள்ளவும். மைதாவை உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு போல் பிசையவும்.
எலுமிச்சை அளவு உருட்டி பூரிக்கட்டையில் வட்டமாக தேய்த்து தோசைக்கல்லை இளஞ்சூட்டில் வைத்து சப்பாத்தியிலுள்ள ஈரப்பதம் மட்டும் போகும் வரை போட்டு எடுக்கவும்.
அதை 1/2 வட்டமாக கட் பண்ணி முக்கோண வடிவில் மடித்து அரைத்தவற்றை சிறிதளவு உள்ளே வைத்து மடித்து மூடவும். எல்லா மாவையும் இதே போல் செய்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய்யை காய வைத்து சமோசாக்களை போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.