ஸோன் பப்டி
10 - Good!
3 நட்சத்திரங்கள் - 10 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
மைதா - 2 தேக்கரண்டி
கெட்டி தயிர் - 1 மேசைக்கரண்டி
தண்ணீர் - 1 மேசைக்கரண்டி
சீனி - 200 கிராம்
முந்திரி பருப்பு - 8
நெய் - 4 ஸ்பூன்
செய்முறை:
முந்திரியை சுடு நீரில் 10 நிமிடங்கள் ஊற வைத்து சிறு துண்டுகளாக்கி கொள்ளவும்.
சீனி, மைதா, தயிர், 2 டேபிள்ஸ்பூன் நெய், இவற்றை ஒன்றாக வாணலியில் கொட்டி, அடுப்பில் வைத்து (சிறு தீயில்) கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
பிறகு, மீதி நெய்யையும், நடுநடுவே கொஞ்சம் கொஞ்சமாக விட்டு பக்கங்களில் ஒட்டாமல் வரும் போது முந்திரி துண்டுகளை போட்டு கிளறி சிறிது தளர இருக்கும் போதே நெய் தடவிய தட்டில் கொட்டி துண்டுகள் போடவும்.