வெள்ளை அப்பம்
தேவையான பொருட்கள்:
பசுமதி அரிசி - 1 1/2 கப்
பேக்கிங் பவுடர் - 1/4 தேக்கரண்டி
ஈஸ்ட் - 1/2 தேக்கரண்டி
இளம்சூடான நீர் - 1/4 கப்
தேங்காய் பால் - 1/2 கப்
பிரவுண் சீனி - 4 மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பசுமதி அரிசியை 3 அல்லது 4 மணித்தியாலங்களுக்கு ஊறவிட்டு தோசைக்கு அரைப்பதுபோல் விழுதாக அரைக்கவும்.
இளம்சூடான நீரில் 1 மேசைக்கரண்டி பிரவுண் சீனியைக் கரைத்து அதனுள் ஈஸ்ட்டை போட்டு 10 நிமிடங்களுக்கு வைக்கவும்.
பின்னர் அரைத்த மாவினுள் பேக்கிங் பவுடர், ஈஸ்ட் கரைசல், உப்பு, 1 மேசைக்கரண்டி சீனி என்பவற்றை சேர்த்து குழைத்து (தோசைமா பதத்தில்) 3 அல்லது 4 மணித்தியாலங்களுக்கு புளிக்க விடவும்.
தேங்காய்ப்பாலினுள் மீதமுள்ள சீனியை போட்டு கரைத்து வைக்கவும்.
பின்னர் அப்பச்சட்டியை சூடாக்கி அதில் 1 அல்லது 1 1/2 கரண்டி மாவை ஊற்றி சட்டியை சுழற்றி விட்டு மூடி அரை நிமிடம் வேக விட்டு பின்னர் மூடியைத்திறந்து 2 அல்லது 3 மேசைக்கரண்டி தேங்காய்ப்பாலை அப்பத்தின் நடுவில் பரவலாக ஊற்றி திரும்பவும் மூடி 2 அல்லது 3 நிமிடங்கள் வேக விட்டு எடுத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
இதனை சூடாக பரிமாறவும்.
இதற்கு பக்க உணவுகள் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்.