வெல்ல சீடை (2)
1 - Poor!
1 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு - 1 ஆழாக்கு
உளுந்து மாவு - 2 தேக்கரண்டி
தேங்காய் - 1 துண்டு
வெல்லம் - 1 கப்
எள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
அரிசி மாவை வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும்.
பிறகு எள்ளையும் வறுக்கவும்.
தேங்காயை சிறு சிறு பல்லாக வெட்டி நெய்யில் வறுக்கவும்.
வெல்லத்தை இளம் பாகாக்கி கீழே இறக்கி அரிசி மாவு, தேங்காய், எள்ளை சேர்த்து நன்றாக கிளறவும்.
எண்ணெய் காய வைத்து வெல்லமாவை சிறு உருண்டையாக (முழு நெல்லிக்காய் அளவு) உருட்டி பொரித்து எடுத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்