வாழைபழ அல்வா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

நன்கு கனிந்த வாழைப்பழம் - 2

மைதா - 2 மேசைக்கரண்டி

சர்க்கரை - 1 கப்

நெய் - 3 மேசைக்கரண்டி

ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி

ரெட் கலர் - கொஞ்சம்

செய்முறை:

வாழைப்பழங்களை நன்கு மசித்து கொள்ளவும்.

ஒரு பானில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி மைதாவை வாசம் வரும் வரை வதக்கவும்.

மாவுடன் மசித்த பழத்தை சேர்த்து சுருள வதக்கவும்.

பிறகு சர்க்கரை மற்றும் கலர் பௌடர் சேர்த்து கிளறவும்.

கலவை சிறிது கெட்டியானதும் நெய், ஏலம் சேர்த்து அல்வா பதம் வரும் வரை கிளறி எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: