ரோஸ் கேக்
தேவையான பொருட்கள்:
மைதா - 200 கிராம்
சீனி - 300 கிராம்
பால் - 200 மில்லி
நெய் - 100 கிராம்
ரோஸ் கலர் பவுடர் - ஒரு சிட்டிகை
ரோஸ் எசன்ஸ் - இரண்டு துளி
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
செய்முறை:
பாலை காய்ச்சி வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் இருபத்தைந்து மில்லி நெய் ஊற்றி முந்திரியைப் போட்டு சிவக்க வறுத்து பருப்பை வெளியில் எடுத்து முந்திரியை மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றிப் பொடிக்கவும்.
அடுப்பை சிம்மில் வைத்து அதே நெய்யில் மைதாவை சலித்து போட்டு இரண்டு நிமிடம் வறுக்கவும்.
சீனியை கொட்டி நன்றாக கிளறவும். பாலை ஊற்றி, விடாமல் கிளறவும். கலர் பொடி சேர்க்கவும். நெய்யை ஊற்றி கிளறவும்.
நன்றாக வெந்து பக்கங்களில் ஒட்டாமல் வரும்போது எசன்ஸ் விட்டு கிளறி இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி சூடாக இருக்கும் போதே மேலே முந்திரி பொடி தூவி ஒரு டபராவால் லேசாக அழுத்தி விடவும்.
அரை சூடு உள்ள போது டைமண்ட் வடிவில் துண்டுகள் போட்டு ஒரு பேப்பரை அதன் மேல் கவிழ்த்து தட்டை தலை கீழாக திருப்பி தட்டை எடுத்து விட்டால் துண்டுகள் தனித்தனியாக பிரித்து எடுக்க சுலபமாக வரும்.