ரிச் கேசரி (குழந்தைகளுக்காக)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்

சீனி - 1/2 கப்

மில்க் மெய்டு - 3 மேசைக்கரண்டி

கேசரி கலர் - தேவைக்கு

பாதாம் - 5

பிஸ்தா - 5

முந்திரி - 5

நெய் - 3 மேசைக்கரண்டி

பால் - 1/2 கப்

பால் - 1 தேக்கரண்டி மற்றும் 3 மேசைக்கரண்டி

செய்முறை:

முதலில் ரவையை வெறும் வாணலியில் போட்டு வறுத்துக்கொள்ளவும்.

பாதாம், பிஸ்தாவை தோல் நீக்கி, முந்திரியுடன் சேர்த்து 3 மேசைக்கரண்டி பால் ஊற்றி மிக்ஸியில் மை போல் அரைத்துக்கொள்ளவும்.

பின் ரவையில் தண்ணீர் சேர்த்து வேகவைத்து தண்ணீர் வற்றியதும் பால் சேர்த்து வேகவிடவும்.

பால் வற்றி வரும்

சமயம் சீனியை சேர்த்து கிளறவும்.

பின் 1 தேக்கரண்டி பாலில் கேசரி கலரை கரைத்து ரவை கலவையில் ஊற்றவும்.

பின் அரைத்த கலவையை ஊற்றி கிளறவும்.

பின் மில்க் மெய்டு ஊற்றி கிளறவும்.மில்க் மெய்டு, முந்திரி கலவையை ஊற்றியபின் அடி பிடிக்க ஆரம்பிக்கும் அதனால் கைவிடாமல் கிளறவும்.பின் நெய் ஊற்றி கிறவும்.

நன்கு கேசரி பதம் வந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: