ராகி லட்டு
0
தேவையான பொருட்கள்:
ராகி மாவு - 1 கப்
பாதாம் - 10 அல்லது 15
முந்திரி - 10 அல்லது 15
பிஸ்தா - 10
வறுத்த வேர்கடலை - 1 கைபிடி
ஏலக்காய் - 4
வெல்லம் பாதி, சர்க்கரை பாதியாக சேர்த்து பொடி செய்தது - 1 கப்
நெய் - 1/4 அல்லது 1/2 கப்
செய்முறை:
ராகியை வெறும் கடாயில் வறுத்து எடுக்கவும்.
பாதாம், முந்திரி, பிஸ்தா, வறுத்த கடலை, எலக்காய் எல்லாம் சேர்த்து பொடி செய்து 1 கப் அளவு எடுத்துக்கொள்ளவும்.
அனைத்தையும் ஒன்றாக கலந்து உறுகிய நெய் விட்டு லட்டுகளாக (உருண்டைகளாக) பிடித்து வைத்து பரிமாறவும்.