ரஸ்க் சத்து உருண்டை
தேவையான பொருட்கள்:
ரஸ்க் - 10
அவல் - 1 கப்
பாசிப்பருப்பு - 1 கப்
வேர்க்கடலை வறுத்தது - 1 கப்
பொட்டுக்கடலை - 1 கப்
வெள்ளை எள்- 1 கப்
நாட்டுச் சர்க்கரை - 3 கப்
முந்திரி - 8
ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி
ஜாதிக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி
நெய் - 1 கப்
கொப்பரைத்துண்டுகள் - சிறிது
செய்முறை:
முதலில் ரஸ்க்கைப் பொடி செய்து ஒரு பேசினில் கொட்டிக் கொள்ளவும்.
அடுப்பில் வாணலியை வைத்து அவலை வறுத்து எடுக்கவும்.
பாசிப்பருப்பை சிவக்க வறுக்கவும்.
பொட்டுக்கடலையை லேசாக வறுக்கவும்.
ஒவ்வொன்றையும் மிக்சியில் போட்டு பொடி செய்து ரஸ்க் தூளுடன் சேர்க்கவும்.
வெள்ளை எள்ளையும் வறுத்துப் பொடித்து சேர்க்கவும்.
வேக்கடலையை ஒன்றிரண்டாகப் பொடித்து சேர்க்கவும்.
நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய்த்தூள், ஜாதிக்காய்த்தூள் சேர்க்கவும்.
உடைத்த, முந்திரி, கொப்பரை இரண்டையும் நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
மீதியுள்ள நெய்யை உருக்கி சேர்த்து உருண்டை பிடிக்கவும்.