ரவை பூ பணியாரம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பொடி ரவை - 1 கிலோ

முட்டை - 1 கப்

சீனி - 1 கப்

எண்ணெய் - 1 கப்

ஜாம் - 500 கிராம்

தேங்காய் பூ - 250 கிராம் (உலர்ந்தது)

சோடா உப்பு - 1 தேக்கரண்டி

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் முட்டை, சீனி, எண்ணெய் மூன்றையும் ஒன்றாக சேர்த்து கலக்கவும். அதில் சோடா உப்பையும் சேர்க்கவும். அதனுடன் ரவையை சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும். கையில் உருண்டை பிடிக்கும் பதம் வந்ததும் ரவை சேர்ப்பதை நிறுத்தவும்.

இந்த கலவையை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்து 250° சூட்டில் அவனில் வைக்கவும். 5 நிமிடம் கழித்து பார்த்தால் மேலே லேசாக வெடித்து வந்திருக்கும். அப்போது எடுத்து விடவும்.

ஜாமுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் மிதமான சூட்டில் வைக்கவும்.

பணியாரத்தை அவனிலிருந்து எடுத்து செய்து வைத்திருக்கும் ஜாமில் போட்டு தோய்த்து எடுக்கவும்.

தேய்த்து எடுத்த பணியாரத்தை தேங்காய் பூவில் போட்டு பிரட்டி எடுத்து வைக்கவும்.

குறிப்புகள்:

தேங்காய் பூ உலர்ந்தது பாக்கெட்டில் இருக்கும்.

மாவை உருண்டை பிடித்து வைக்கும் போது கொஞ்சம் தள்ளி தள்ளி இடைவெளி விட்டு வைக்கவும்.

பணியாரம் வெள்ளை நிறமாக இருக்கும் போதே அவனிலிருந்து எடுத்து விடவும்.