ரவை பாயசம் (1)
0
தேவையான பொருட்கள்:
ரவை - 1/2 கப்
சர்க்கரை - 1/2 கப்
நெய் - 1/2 கப்
தேங்காய் பால் - 3 கப்
ஏலப்பொடி - ஒரு தேக்கரண்டி
வறுத்த முந்திரி - 25 கிராம்
வறுத்த திராட்சை - 25 கிராம்
செய்முறை:
வாணலியில் நெய் ஊற்றி ரவையை போட்டு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தேங்காய் பால், சர்க்கரை சேர்த்து கலக்கி அதனுடன் சேமியாவை சேர்த்து மிதமான தீயில் வைத்து கலவை நன்கு கெட்டியாகும் வரை கிளறவும்.
அதில் ஏலப்பொடி, வறுத்த முந்திரி, திராட்சை போட்டு இறக்கி பெளலில் வைத்து பரிமாறவும்.