ரவை பணியாரம் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ரவை - 1 டம்ளர்

பூரணம் செய்வதற்கு

தேங்காய்த்துருவல் - 1 கப்

சிறுபருப்பு - 1/4 டம்ளர்

ஏலப்பொடி - 1 பின்ச்

சர்க்கரை - 3/4 கப்

எண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவு

உப்பு - 1 பின்ச்

செய்முறை:

1 டம்ளர் நீரில் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். நன்கு கொதித்து வரும்பொழுது ரவையை கொட்டி கட்டி இல்லாமல் கிளறவும்.

சிறுப்பருப்பை வாசனை வரும் வரை வறுக்கவும். இதனை நன்கு கழுகி, நீரை வடித்து விட்டு தேங்காய்த்துருவல், சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்துக் கலக்கவும்.

இப்பொழுது இனிப்பு பூரணம் தயார்.

ரவையை ஒரு பெரிய எலுமிச்சை அளவு உருட்டி பிளாஸ்டிக் ஷீட்டில் எண்ணெய் தடவி மெலிதான சப்பாத்தியாக தேய்க்கவும்.

சப்பாத்தியின் நடுவில் பூரணத்தை வைத்து இரண்டாக - அரைவட்ட வடிவில் மடக்கி, ஓரம் பிரிந்து விடாத அளவுக்கு ஓரத்தை அழுத்தி ஒட்டவும்.

எல்லா மாவிலும் இதே போல் தயார் செய்து, வாணலியில் எண்ணெய் விட்டு மொறுமொறுப்பாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: