ரவை தேங்காய் பர்பி
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
தேங்காய் - 1 கப்
பால் - 1 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 1/2 கப்
பொடித்த முந்திரி - சிறிதளவு
மஞ்சள் கேசரி கலர் - சிறிதளவு
செய்முறை:
வாணலியில் சிறிது நெய் விட்டு ரவையை நன்கு வாசம் வரும் வரை வறுக்கவும்.
கனமான கடாயில் எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும். மிதமான தனலில் அவ்வெப்போது கிளறி கொண்டே இருக்கவும்.
பர்பி திரண்டு உருண்டை போல் வரும் போது சிறிது நெய் சேர்த்து ஒட்டாமல் விலகி வரும் போது இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டவும். ஆறிய பின் விருப்பமான வடிவில் வெட்டி பரிமாறவும்.