ரவை சொஜ்ஜி அப்பம்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்

வெல்லம் - 1 கப்

மைதா - 1 கப்

ஏலக்காய்த்தூள் - 1/4 தேக்கரண்டி

நெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

மேல் மாவு:

மைதாவை சிட்டிகை உப்பு சேர்த்து பிசையவும். ஒரு டீஸ்பூன் எண்ணை சேர்த்து கலந்து வைக்கவும்.

பூரணம்:

வாணலியில் நெய் ஊற்றி ரவையை சிவக்க வறுக்கவும்.

வெல்லத்தை கால் கப் தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி அதை வறுத்த ரவையில் கொட்டிக் கிளறவும்.

கெட்டியாக சுருண்டு வரும் பதத்தில் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும்.

ஆறியதும், சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.

சொஜ்ஜி அப்பம்:

பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

வாழை இலையில் மாவு உருண்டைகளை கையில் எண்ணை தொட்டுக்கொண்டு தட்டி பூரணத்தை வைத்து மூடி தட்டவும்.

தோசைக்கல்லில் ஒவ்வொரு அப்பமாக போட்டு நெய் விட்டு மிதமான தீயில் சுட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: