ரவை சர்க்கரை பொங்கல்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ரவா - 1 1/4 கப்

வெல்லம் - 1/4 கிலோ

முந்திரி பருப்பு - 25 கிராம்

திராட்சை - 10 கிராம்

ஏலக்காய் - 5

நெய் - 100 கிராம்

டால்டா - 50 கிராம்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

சுத்தம் செய்த ரவாவை லேசாக டால்டா விட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். ரவாவிற்கு ஏற்றவாறு இருமடங்கு தண்ணீர் ஊற்றி பாத்திரத்தில் உள்ள நீரை நன்றாக கொதிக்க விடவும்.

அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து சீவி வைத்த வெல்லத்தை கொதிக்கும் தண்ணீரில் போட்டு தண்ணிருடன் கொதிக்கும் போது சிறிது சிறிதாக போடவும்.

வெல்லத்தை போட்டு கெட்டியாக வரும் வரை நன்கு கிளறவும்.

வாணலியில் நெய் விட்டு முந்திரி, ஏலக்காய், திராட்சை போட்டு பொரித்து எடுத்து ரவா, சர்க்கரைப் பொங்கலில் போட்டவும்.

குறிப்புகள்: