ரவை கேசரி (1)
தேவையான பொருட்கள்:
ரவை - 1/4 கிலோ
சர்க்கரை - 3 ஆழாக்கு (600 கிராம்)
டால்டா அல்லது நெய் - 100 கிராம்
முந்திரி - தேவைக்கேற்ப
உலர்ந்த திராட்சை - 10 கிராம்
ஏலக்காய் - 5
பச்சைகற்பூரம் - ஒரு துளி
ஜாதிக்காய் - ஒரு துளி
கேசரிப்பவுடர் - 50 பைசா (சிறிது)
செய்முறை:
பச்சைகற்பூரத்தையும், ஜாதிக்காயையும் 1/4 கிளாஸ் பாலில் ஊற்றி கரைக்கவும். துளியளவுதான் சேர்த்தால் சுவையாகயிருக்கும். விருப்பமில்லையென்றால் சேர்க்கவேண்டாம்.
ஒரு கடாயில் 2 ஸ்பூன் நெய் விட்டு முந்திரியை சிறு தீயில் வறுக்கவும். அதனுடன் திராட்சையும் சேர்த்து வறுத்து எடுத்து வைக்கவும்.
அதே நெய்யில் ரவையை கொட்டி வாசம் வரும் வரை வறுத்து ஒரு தட்டில் கொட்டவும்.
பிறகு அதே கடாயில் 4 கிளாஸ் (1க்கு 2 1/2 அளவு) தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். தேவையான அளவு கேசரிப்பவுடர் சேர்க்கவும். அதில் ரவையை சிறிது, சிறிதாக கொட்டி கிளறவும்.
அரை ஸ்பூன் உப்பு சேர்க்கவும். தண்ணீர் வற்றி ரவை வெந்தவுடன் சர்க்கரையை சிறிது, சிறிதாக சேர்த்து கிளறவும். கட்டி பட்டால் உடைத்து கிளறவும்.
டால்டாவை உருக்கி வைத்துக்கொள்ளவும்.
சிறிது, சிறிதாக டால்டாவை விட்டு கிளறவும். எல்லா நெய்யும் விட்டு கிளறும்போது முந்திரி, திராட்சை, ஏலப்பொடி சேர்த்து நெய் கேசரியிலிருந்து பிரிந்து வரும்போது இறக்கி பரிமாறவும்.