ரவை அல்வா

on on on off off 2 - Good!
3 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ரவை - 200 கிராம்

நெய் - 200 கிராம்

சீனி - 400 கிராம்

முந்திரிப்பருப்பு - 100 கிராம்

உலர்ந்த திராட்சை - 50 கிராம்

ஏலக்காய் தூள்- 1 தேக்கரண்டி

செய்முறை:

ஒரு வாணலியில் ரவையை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

முந்திரிப்பருப்பை நறுக்கி வைக்கவும்.

3/4 கப் சுடுநீரில் ரவையை 2-3 மணிநேரம் மாப்பதம் வரும் வரை ஊறவிடவும்.

பின்பு ஒரு கப் நீரில் சீனியைக் கரைத்து அடுப்பில் வைத்துக் காய்ச்சவும்.

சீனிப்பாகு நூல் பதம் வந்ததும் ரவையைக் கொட்டிக் கிளறவும்.

நெய்யை சிறிது சிறிதாக சேர்த்துக் கிளறவும்.

அத்துடன் ஏலக்காய்த்தூள், முந்திரி, திராட்சையையும் சேர்த்துக் கிளறவும்.

கையில் ஒட்டாத பதம் வரும்போது ஒரு தட்டில் நெய்யை தடவி அதில் கலவையைக் கொட்டி பரவிவிடவும். விரும்பிய அளவு துண்டுகளாக வெட்டிப் பரிமாறவும்.

குறிப்புகள்: