ரவை அப்பம்

on on on on off 2 - Great!
4 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ரவை - 1 கப்

மைதா மாவு - 1/4 கப்

சீனி - 3/4 கப்

பொடியாக அரிந்த தேங்காய் - 2 தேக்கரண்டி

பொடியாக உடைத்த முந்திரிப்பருப்பு - 1 தேக்கரண்டி

ரீஃபைண்ட் ஆயில் - பொரிப்பதற்கு தேவையான அளவு

உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

ரவையையும் மைதா மாவையும் கலந்து, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

பிறகு, சீனி, பொடியாக அரிந்த தேங்காய், முந்திரிப்பருப்பு, சிட்டிகை உப்பு, எல்லாவற்றையும் சேர்த்து, தயிர் பதத்தை விட சிறிது கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, மிதமாகக் காய்ந்ததும், ஒரு கரண்டியால் மாவை அள்ளி, அப்பங்களாக ஊற்றவும். ஒரு புறம் சிறிது வெந்ததும், திருப்பி விட்டு, வேக விடவும். இரு புறமும் வெந்ததும், எடுத்து விடவும்.

குறிப்புகள்: