ரவா லாடு (1)
6 - Good!
3 நட்சத்திரங்கள் - 6 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
நெய் - 2 தேக்கரண்டி
சர்க்கரை - 1 கப்
தேங்காய் துருவல் - 2 தேக்கரண்டி
முந்திரி பருப்பு - 4
ஏலப்பொடி - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
ரவையை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். ஏலக்காயை பொடி செய்து வைக்கவும்.
கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி பருப்பை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் ரவையை போட்டு அதிகம் சிவக்க விடாமல் வறுத்தெடுக்கவும்.
அதில் தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி சேர்க்கவும்.
எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்த பின் நன்றாக கலந்து கை பொறுக்கும் சூட்டில் தேவையான அளவில் லட்டுகளாக (உருண்டைகளாக) பிடித்து வைத்து பரிமாறவும்.