ரவா லாடு

on on on off off 10 - Good!
3 நட்சத்திரங்கள் - 10 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ரவை - 1/4 கிலோ

சர்க்கரை - 1/2 கிலோ

நெய் - 150 கிராம்

முந்திரி - 25

ஏலப்பொடி- 1 தேக்கரண்டி

செய்முறை:

ரவா வை பொன்னிறமாக வறுத்து மிஷினில் கொடுத்து நைசாக அரைக்கவும்

சர்க்கரையையும் மிஷினில் கொடுத்து நைசாக அரைக்கவும்

பொடித்த சர்க்கரை, ரவையை ஏலப்பொடியுடன் கலந்து வைக்கவும்

ஒரு கடாயில் நெய் விட்டு முந்திரியை சன்னமாக உடைத்துப்போட்டு வறுத்து மாவுக்கலவையில் கொட்டி கிளறி

சூட்டுடன் இருக்கும் போதே உருண்டைகளாக பிடிக்கவும்.

மாவை ரெடி செய்து வைத்துக்கொண்டால் வேண்டும்போது 5 நிமிடத்தில் இந்த ஸ்வீட்டை தயாரித்து அசத்தலாம்

கலர் கிஸ்மிஸ் போட்டு உருண்டை பிடித்தால் கலர்புல்லா இருக்கும்.

குறிப்புகள்: