ரவா மேங்கோ கேக்

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ரவை - 1/2 கப்

சர்க்கரை - 1/4 கப்புக்கு 2 தேக்கரண்டி குறைவு

மாம்பழ கூழ் - 1/2 கப் (ஏறக்குறைய 1 மாம்பழம்)

பேக்கிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி

ஏலக்காய் தூள் (விரும்பினால்) - சிறிது

வெண்ணெய் - 1/4 கப்

மேலே அலங்கரிக்க:

மாம்பழ கூழ் - 1/4 கப்

சர்க்கரை - 1 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி

செய்முறை:

பேக்கிங் டிஷ்ஷில் வெண்ணெய் தேய்த்து தயாராக வைக்கவும்.

ரவை, சர்க்கரை, ஏலக்காயை மிக்ஸியில் பொடிக்கவும்.

வெண்ணெயை உருக்கி ஆறியதும் மாம்பழ கூழ், ரவை கலவை, பேக்கிங் பவுடர், வெண்ணெய் எல்லாம் கலந்து விடவும்.

அதிகம் அடித்து கலக்க கூடாது, மஃபின் கலப்பது போல் கலந்தால் போதுமானது.

அவனை 190C’ல முற்சூடு செய்து இதை பேக்கிங் டிஷ்ஷில் ஊற்றி 15 - 20 நிமிடம் வரை பேக் செய்யவும்.

டூத் பிக் கொண்டு குத்தி பார்த்தால் ஒட்டாமல் வரும், அப்போது எடுத்து விடலாம்.

சுவையான ரவை மேங்கோ கேக் தயார்.

மேலே அலங்கரிக்க கொடுத்தவற்றை மிக்ஸியில் அல்லது ப்லெண்டரில் நன்றாக அடித்து கொள்ளவும்.

இதை தேக்கரண்டிகொண்டு கேக் மேல் பூசி விடவும்.

குறிப்புகள்: