ரவா பணியாரம் (4)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ரவா - 2 கப்

சீனி - 1 கப்

துருவிய தேங்காய் - 1/4 கப்

முந்திரிப்பருப்பு - 8

ஏலக்காய் - ஒரு சிட்டிகை

உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை:

ரவையை ஊற வைத்து அரை மணி நேரம் கழித்து, ஊறிய ரவை, சீனி, தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.

அதனுடன் ஏலக்காய், உப்பு, முந்திரிப்பருப்பு சேர்த்து கிளறவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், குழிகரண்டியில் மாவை எடுத்து ஊற்றி வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: