ரவா கேசரி 2
1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
ரவா - 1 கப்
சீனி - 1 1/2 கப்
முந்திரி - 15
திராட்சை - 15
டூட்டி ப்ருட்டி - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் - 3
நெய் - 1/2 கப்
கலர் பவுடர் - 1/4 தேக்கரண்டி
தண்ணீர் - 2 கப்
செய்முறை:
முந்திரியை துண்டுகளாக உடைத்து வைக்கவும். ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும். தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் நெய் போட்டு அதில் முந்திரி, திராட்சை போட்டு ஒரு நிமிடம் வறுக்கவும்.
அதில் ரவாவை போட்டு 2 நிமிடம் வதக்கவும்.
பிறகு கொதிக்க வைத்த தண்ணீரை ஊற்றி கிளறவும்.
சீனியை சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
கலர் பவுடர் போட்டு 3 நிமிடம் கை விடாமல் கிளறவும்.
இறக்கும் போது ஏலக்காய் பொடி, டூட்டி ப்ருட்டி போட்டு கிளறி இறக்கி பரிமாறவும்.